திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பெண்கள் கிளை சிறை அமைந்துள்ளது. இதில் விசாரணை சிறைவாசிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் சிறைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறை வளாகத்திற்குள் கழிப்பறை அருகே நோக்கியா நிறுவனத்தை சார்ந்த கைபேசி ஏர்டெல் சிம் கார்டு உடன் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து , சிறை கண்காணிப்பாளர் வசந்தி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரை தொடர்ந்து ஆய்வு செய்த போலீசார், சிம் கார்டு யாருடைய பெயரில் உள்ளது என்பதை ஆய்வு செய்தனர் ,சிம் கார்டின் உரிமையாளர் சிறைவாசியா ? அல்லது வேறொருவர் உதவியுடன் கைபேசி உள்ளே வந்ததா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் அவ்வப்போது திடீர் சோதனைகளை நடைபெறும். ஆனால் , பெண்களை சிறையில் இது போன்ற சோதனைகள் நடத்தப்படுவதில்லை.
மத்திய சிறையை போன்று கிளைச் சிறையிலும் அவ்வப்போது , திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.