கருணாநிதியின் மகன் மு.க முத்துவுக்கு உடல் நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் அவரின் மூத்த மனைவி பத்மாவதிக்கும் பிறந்தவர் மு.க முத்து. இவர் தனது தனது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அரசியலில் ஈடுபடமாமல் தனித்து வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு மு.க முத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றூ நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில் மீண்டும் மு.க முத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான சிகிச்சைகள வழங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News