“இடையூறு அளிக்கும் சங்கிகள்..” விஷக்காய்ச்சலில் அதிமுக..! அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனி பெருந்திருவிழாவையொட்டி 519 ஆவது ஆண்டு தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 130 திருக்கோயில்களில் 134 மரதேர்கள் புதிதாக செய்யப்பட்டுள்ளதாகவும்., 19 கோடி ரூபாய் மதிப்பில் 72 திருக்கோயில்களில் 75 மர தேர்கள் பராமரிப்பு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

ரூபாய் 59 லட்சம் மதிப்பில் புதிதாக சண்டிகேஸ்வரர் தேர் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 43 லட்சம் மதிப்பில் சுவாமி மற்றும் அம்பாள் விநாயகர் தேருக்கு மரக்குதிரைகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன. ரூபாய் 6 லட்சம் மதிப்பில் புதிதாக தேர்வடங்கள் வாங்கப்பட்டுள்ளன. சாலைகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளும் செய்யப்பட்டு தேரோட்டம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு 75 கோடி ரூபாய் மதிப்பில் 130 திருக்கோயில்களில் 134 மரதேர்கள் புதிதாக செய்யப்பட்டுள்ளன. 19 கோடி ரூபாய் மதிப்பில் 72 திருக்கோயில்களில் 75 மர தேர்கள் பராமரிப்பு செய்யப்பட்டுள்ளன.

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வாழ்ந்த தமிழகத்தில், முன்னோர்களது வழியில் ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சியில், 30 கோடி ரூபாய் மதிப்பில் 197 திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு மழையிலும் வெயிலிலும் தேர்கள் சேதமாகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. ரூபாய் 31 கோடியில் ஐந்து திருக்கோயில்களில் தங்கத் தேர் திருப்பணி நடைபெற்றுள்ளது. ரூபாய் 29 கோடியில் ஒன்பது புதிய வெள்ளித்தேர்கள் செய்யும்பணி தொடங்கப்பட்டு அதில் இரண்டு தேர் பக்தர்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளாக ஓடாமல் தடைபட்டிருந்த சில தேர்கள் , திமுக ஆட்சியில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து பேசி மீண்டும் தேரோட்டம் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தால் முதல்வருக்கு ஜுரம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருப்பது நகைப்புக்குரியது. திருச்செந்தூரில் திங்கட்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கூடிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் உள்ளனர். மீண்டும் திமுக ஆட்சி வரும் என திருச்செந்தூரில் திரண்ட மக்கள் கட்டியம் கூறியுள்ளனர். உண்மையில் பாஜக அதிமுக கூட்டணிதான் விஷக்காச்சல் போன்றது.

தமிழக திருக்கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் அறநிலைத்துறை உதவியுடன் செய்யப்பட்டு வருகிறது. சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஓலைச்சுவடிகளை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் வழங்கும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது. நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் மதச்சார்பின்றி இந்து முஸ்லிம் கிறிஸ்தவ நண்பர்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். இந்த ஒற்றுமை எந்நாளும் தொடர மக்கள் மீண்டும் திமுக ஆட்சி மலர வாய்ப்பு அளிக்க வேண்டும் அதற்கு அருள்மிகு நெல்லையப்பரும் அருள்பாலிப்பார் என நம்புகிறேன். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் போது உடனடியாக சங்கிகள் அதற்கு இடையூறு செய்வார்கள் நீதிமன்றத்திற்கு சென்று தடை பெறுவார்கள் எனவும் கூறினார்.

RELATED ARTICLES

Recent News