ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு மேற்கே ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள டார்லிங் ஆற்றில் சுமார் 10 லட்சம் மீன்கள் செத்து மிதக்கின்றன.

மோசமான நீரோட்டம், மோசமான நீரின் தரம், திடீர் வெப்பநிலை ஆகிய காரணங்களால் மீன்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
இதே பகுதில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் அதிகளவில் மீன்கள் இறந்து கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.