மிலிட்டரி மது பாட்டில்களை கள்ள சந்தையில் விற்பனை செய்தவர்களை மதுவிலக்கு அமலாக்க போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மிலிட்டரி மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் அதேப்பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் விற்பனையில் ஈடுபட்டது தெரிவந்தது.
இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்., மிலிட்டரி கேன்டினில் அவர் வேலைப்பார்த்து வந்ததாகவும்., அங்கு வரும் மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விற்பனையில் ஈடுபட்ட ஏகாம்பரம் மற்றும் சேகர் ஆகிய இருவரையும் கைது செய்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்..