ராணுவத்தின் நடவடிக்கை தீர்வையும், அமைதியையும் தராது என்று, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கையாக, ஆபரேஷன் சிந்தூர்-ஐ இந்திய ராணுவம் நடத்தி வருகிறது. இதன்காரணமாக, இருதரப்புகளிலும் தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பூன்ஞ் பகுதியில் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து, தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
மேலும், ராணுவத்தின் இந்த நடவடிக்கைகள், அறிகுறிகளை மட்டும் தான் சரி செய்யும் என்றும், மூலப்பிரச்சனையை சரி செய்யாது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, இருநாட்டு பிரச்சனையால், காஷ்மீர் மக்கள் பிரச்சனையை சந்தித்து வருவதாகவும், இருநாட்டின் தலைவர்களும் இணைந்து, இந்த தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.