ஒரு வருடத்திற்கு முன்பு.. 17 ஆயிரம் கோடிக்கு அதிபதி.. இப்போது பரிதாப நிலை.. என்ன ஆனது?

கேரள மாநிலத்தில் உள்ள இரண்டு ஆசிரியர்களுக்கு மகனாக பிறந்தவர் பைஜூ ரவீந்திரன். கன்னூர் பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், மிகவும் கடினமான தேர்வான CAT-ஐ இரண்டு முறை எழுதி, தேர்ச்சி பெற்றார்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2007-ஆம் ஆண்டு அன்று, தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு, CAT கோச்சிங் சென்டரை, தொடங்கினார். அதன்பிறகு, பைஜூ ரவீந்திரன் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து, 2011-ஆம் ஆண்டு அன்று, பைஜூ நிறுவனத்தை உருவாக்கியிருந்தார்.

பின்னர், இவர்களது இந்த வித்தியாசமான ஐடியாக்கள் மூலம், பலரது கவனத்தை ஈர்த்து, உச்சகட்ட வளர்ச்சியை அந்நிறுவனம் பெற்றது. இவ்வாறு அசுர வளர்ச்சியை பெற்ற இந்நிறுவனம், தற்போது அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

அதாவது, 17 ஆயிரத்து 545 கோடிக்கு அதிபதியாக, இந்தியாவின் பணக்கார ஆசிரியராக இருந்தவர் பைஜூ ரவீந்திரன். இவர், 1 லட்சத்து 65 ஆயிரத்து 924 கோடி மதிப்பில் இருந்த பைஜூ என்ற ஸ்டார்ட் – அப் நிறுவனத்தின் நிறுவனர்.

ஃபோர்ப்ஸ் பில்லினியர் லிஸ்டில், ஜொலித்து கொண்டிருந்த இந்த நிறுவனம், தற்போது, அந்த லிஸ்டில் இடம்பெறாத நிலைக்கு சென்றுள்ளது. நம்புவதற்கு அதிர்ச்சியான தகவலாக இருந்தாலும், இப்போது பைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக உள்ளது.

ப்ரோசஸ் என்ற முதலீட்டு நிறுவனம், 5.97 பில்லியன் டாலருக்கு தங்களது முதலீட்டை குறைத்துக் கொண்டதால், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மிகப்பெரிய நெருக்கடி, பைஜூ நிறுவனத்திற்கு ஆரம்பமானது.

இதுமட்டுமின்றி, அந்நிய செலவாணி விதிகளை மீறியதாக கூறி, அமலாக்கத்துறையினரால், சோதிக்கப்பட்டிருந்தது, நிலைமையை இன்னும் மோசமாக்கியது. தற்போது, தன்னுடைய ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியாமல், திணறி வருகிறது.

RELATED ARTICLES

Recent News