திமுகவில் இருந்து விலகும் மதிமுக வைகோ..!! இணைய போகும் புதிய கட்சி..?

திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மதிமுக தற்போது., அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மதிமுக கட்சியில் இருந்து விலக போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது. அதற்கு ஏற்றவாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடந்த சில தினங்களுக்கு முன் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு :

அதாவது திமுகவில் உள்ள சில கூட்டணி கட்சிகளோடு பாஜக பேச்சு வார்த்தை நடத்தியதாகவும்., முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஒரு கட்சி தான் தற்போது இணையவுள்ளதாக மதிமுக-வை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். மேலும் அதன் பிரத்யேக அறிவிப்புகளும் இன்னும் 3 மாதத்தில் வெளியாகும் என கூறியிருந்தார்.

மதிமுக வைகோ விளக்கம் :

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவுடன் மட்டும் எப்போதும் கூட்டணியில் இருப்போம் என கூறியிருந்தார். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் திமுகவுடன் கைகோர்த்து நின்று வெற்றி பெறுவோம் என விளக்கம் அளித்துள்ளார்.

குழப்பத்தில் மதிமுக :

ஏற்கனவே திமுக மற்றும் விசிகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்திருப்பது பேசுப்பொருளாகி வரும் நிலையில்., தற்போது மதிமுகவும் விலகி விட்டால் என்ன நிலை என்ற கேள்விகள் மறுப்பக்கம் எழுந்து வருகிறது.

இதனிடையே மதிமுகவில் இருந்த முத்து ரத்தினம் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். மேலும் துரை வைகோவிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால்., மதிமுக விலகி விடுமோ என்ற குழப்பத்தில் திமுக மற்றும் மதிமுக இருப்பதாக சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News