ஆம்ட்ராங் கொலைக்கு மாயாவதி கண்டனம்!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், அவரது சென்னை வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்துத்துக்குரியது மற்றும் வருத்தத்துக்குரியது.

வழக்குரைஞரான ஆம்ஸ்ட்ராங், தமிழகத்தில் வலுவான தலித் தலைவராக அறியப்பட்டார். குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News