மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’.இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வபோது , படத்தின் அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.
தற்போது,பட வெளியீடு குறித்து சிக்கல் எழுந்துள்ளது.’மாவீரன்’ திரைப்படத்திற்கு தடைவிதிக்க கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், இதில் மிஷ்கின் வரும் கதாபாத்திரத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா அவர்கள் படத்தின் முதல் ,இடைவேளை,இறுதி என இம்மூன்று நேரத்திலும் இப்படத்தில் எந்த வித கட்சி கொடிகளும் ,பயன்படுத்தவில்லை என மொத்தமாக 40 நொடிகள் பொறுப்பு துறப்பு வெளியிட வேண்டும் என்று பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, படத்தை வெளியிட அனுமதித்துள்ளார்.
மேலும் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காதவாறு காட்சிகள் இடம்பெற வேண்டும் என்றும் அதற்கு ஏற்றவாறு காட்சியில் உள்ள கொடியின் நிறத்தை மாற்றி ஓடிடி மற்றும் சாட்லைட் சேனலில் வெளியிட உத்தரவிட்டுள்ளார்.