தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது குறித்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் சுகுமார் தலைமையிலும் பள்ளியின் தலைமையாசிரியர் அந்தோணி ராஜ் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் நந்தா, புதுமை திட்ட அலுவலர் அப்சனா சமூக ஆர்வலர்கள் செல்வகுமார் செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் மாணவர்களிடம் கலந்துரையாடி சுற்றுப்புறத்தை பாதுகாப்பது எப்படி என்பது குறித்த தகவல்களை எடுத்துக் கூறினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மஞ்சப்பை மற்றும் சிற்றுண்டிகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.