கொல்கத்தாவில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நேற்று ஏற்பாடு செய்த உரையாடல் நிகழ்வில் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியசாமி பங்கேற்றார்.

‘இன்று நாட்டில் சக்திவாய்ந்த பெண் யார்?’ என்ற கேள்விக்கு, ‘ஒரு காலத்தில் ஜெயலலிதா இருந்தார். அப்புறம் ஒரு காலத்தில் மாயாவதியை அவ்வாறு நினைத்தேன். தற்போதைய சூழ்நிலையில் சக்திவாய்ந்த பெண் மம்தாதான். அவர்தான் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கக்கூடியவர் என அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் துணிச்சலான பெண். அவரை மிரட்ட முடியாது. மம்தா கம்யூனிஸ்டுகளை எதிர்த்து போராடியவிதத்தை பாருங்கள்.’ என்றார்.