இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கே? ராகுல் காந்தி மௌனம்

இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பி டி.ஆர் பாலு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கார்கே, ராகுல், ஆர்ஜேடி தலைவர் லாலு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கேயை, மம்தா முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மம்தாவின் கருத்திற்கு வைகோ, உபி. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காங். எம்.பி., ராகுல் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை கூட்டம் நிறைவடைந்ததும் அங்கிருந்து சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

Recent News