மலையான சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் லட்சுமி தீப்தி. இவர், வெங்கனூர் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரை அனுகி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்ட இளைஞர், படக்குழுவினர் வழங்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த இளைஞரை, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு வரச் சொன்ன இயக்குநர் லட்சுமி தீப்தி, அங்கு படப்பிடிப்பை நடத்தியுள்ளார். ஆனால், அதன்பிறகே, இது சினிமா படப்பிடிப்பு அல்ல என்றும், ஆபாச படங்கள் தான் எடுக்கப்படுகிறது என்றும் அந்த இளைஞர் உணர்ந்துள்ளார்.
படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள மாட்டேன் என்று இளைஞர் மறுத்ததையடுத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதை காட்டி, அவரை பெண் இயக்குநர் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அந்த காட்சியை நடித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்த இளைஞர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், அந்த பெண் இயக்குநரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.