பழம்பெரும் மலையாள நடிகர் மாமுக்கோயா காலமானார்..!

மலையாள திரைத்துறையின் பழம்பெரும் நடிகர் மாமுக்கோயா காலமானார். அவருக்கு வயது 76.

1946ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கேரளாவில் பிறந்த மாமுக்கோயா 1979ல் அன்யாருடே பூமி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாள திரையுலகில் பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராக அசத்தி வந்தார். சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இரண்டு முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

கடந்த 24-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு மலையாள திரையுலகின் பல முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News