சில நாட்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா குறித்து மாளவிகா மோகனன் பேசிய போது “நயன்தாரா மருத்துவமனை காட்சியில் நடித்தபோது முழு மேக்கப் உடன் தலை முடிகள் கூட கலையாமல் நடித்ததாக’ விமர்சனம் செய்திருந்தார்.
இது குறித்து பேசிய நயன்தாரா ‛ரியலிஸ்டிக் படங்களுக்கும், கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் நடிப்பது கமர்சியல் படம் என்பதால்தான் அப்படி நடித்தேன். என பதிலடி தந்தார்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் நடிகை மாளவிகாவிடம் லேடி சூப்பர் ஸ்டார் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மாளவிகா, “உண்மையாகவே எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கையில்லை. பெண்களை சூப்பர் ஸ்டார் என அழைக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன என எனக்குத்தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் என அழைத்தால் போதும் என கூறியுள்ளார்.