அஜித்தின் ஏகே 62 படத்தின்,பூஜைகள் போடப்பட்டு, புரெடெக்ஷன் பணிகள் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் மார்ச் 2-வது வாரத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குநர் மகிழ்திமேனிக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.அதன்படி அதிகபட்சமாக 10 கோடி வரை சம்பளம் வழங்க லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை 1 கோடி கூட சம்பளம் வாங்காமல் இருந்த மகிழ்திருமேனி, ஏகே 62 படத்திற்காக 10 மடங்கு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.