வெறிநாய்களின் வெறிச்செயல்.! பலியான உயிர்களால் ஆக்ரோஷமடைந்த பொதுமக்கள்..!

கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி பகுதியில் ராமலிங்கம் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கே வந்த வெறி நாய்கள் ஆறு ஆடுகளை கடித்து குதறியதில் சம்பவ இடத்திலே 1 குட்டி உட்பட 6 ஆடு உயிரிழந்தது.பல நாட்களாக மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், வெறி நாய்கள் தொல்லையால் ஆடுகள் உயிரிழப்பு தொடர்வதால் எங்கள் உழைப்பு வீணாகி வருகிறது என்று ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாயனூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.15 நாட்களுக்குள் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து , அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

RELATED ARTICLES

Recent News