பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்.
மே 16-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 9 நாட்களில், 25 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம்.