பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்.
கடந்த 16-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, உலகம் முழுவதும், 6 நாட்களில், 19 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம். இதன்மூலம், ஹீரோவாக இன்னொரு வெற்றியை நடிகர் சூரி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.