தமிழ் சினிமாவின் நடிகராகவும் ,தேமுதிகவின் தலைவராகவும் இருந்து மறைந்தவா் கேப்டன் விஜயகாந்த்.இவாின் இறப்பிற்கு இன்றுவரை பலரும் தங்களது இரங்கல்களை நேரில் சென்றும் , சமூகவலைதளங்கள் மூலமாவும் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில்,இவாின் இறப்பிற்கு நடிகா் வடிவேலு நேரில் இரங்கலோ , அல்லது ஒரு அறிவிப்போ என எதையும் வெளியிடவில்லை இதனால் ஆத்திரமடைந்த
ரசிகா்கள் மற்றும் திரைத்துறையினா் இவா் மீது பல்வெறு விமர்சன கருத்துகளை முன்வைத்து வந்தனா்.ஆனால் ,தற்போது இவாின் நெருங்கிய நண்பரும் விசிக நிர்வாகியுமான மாலின் ஒரு பேட்டியில் விஜயகாந்த் மறைவால் வடிவேலு அழுதது எனக்குத் தெரியும் என்றும் நேரில் சென்றால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடும் என்பதால்தான் அவா் செல்லவில்லை தவிர மற்றபடி எந்ந காரணமும் இல்லை எனத்தெரிவித்தள்ளாா்.இந்த கருத்திற்கு மேலும் பலா் தங்களது
கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனா்.