தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர், அடுத்ததாக, தலைவர் 171 என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது பேவரைட் நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகானை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது, நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நடிகை த்ரிஷாவை பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற காட்சிகள் இல்லை, என்று தான் வருந்துவதாக கூறியிருந்தார்.
இவ்வாறு ஆபாசமாக பேசியதற்கு, நடிகை த்ரிஷா, பாடகி சின்மயி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலர் கண்டனங்களை கூறி வந்தனர்.


அந்த வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-ம், தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.