அதானியால் எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்..!

அதானி குழுமம் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன.

அதானி நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அதானி பங்குகள் சரிவால் எல்ஐசி நிறுவனத்துக்கு பெரிய நஷ்டம் இல்லை என சில வாரங்களுக்கு முன்பு கூறப்பட்டது.

இந்நிலையில், அதானி பங்குகளின் தொடர் சரிவால் எல்ஐசி நிறுவனத்திற்கு தற்போது சுமார் 50,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் கூறுகின்றன.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி அதானி நிறுவனங்களில் எல்ஐசி செய்த முதலீடுகளின் மதிப்பு 82,970 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 33,242 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News