தேனியில் உள்ள மலை கிராமத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை கிராமத்தில் 21 வயது பூர்த்திபெறாத பெண்களின்
திருமண வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இதனை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து இன்று., அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று இல்லம் தேடி மருத்துவம் மற்றும் ஓம் சுகாதாரத் துறையினரால் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் சுகாதாரத் துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மணலாறு மலை கிராமத்தில் இருந்து மலை அடிவாரப் பகுதியான தென்பழனி வரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடை பயணத்தை மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது சுகாதாரத் துறையினர், வனத்துறையினர், காவல் துறையினர், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.