விக்ரம் நடிப்பில் இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும் தயாரிப்பிலும் பலநாட்கள் வெளிவராமல் இருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம்.
இப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் இதன் ரிலீஸில் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. நடிகா் சிம்புவை வைத்து கௌதம் வாசுதேவ் இயக்கவுதாக இருந்த ஒப்பந்தத்தில் படம் முடிவு பெறமாலும்,அதற்கு வாங்கிய 2.40 கோடி பணத்தை கௌதம் மேனன் திருப்பிதராமல் இருக்கிறார் என ஆல் இன் பிக்சா்ஸ் பங்கு தாரா் விஜய் ராகவேந்திராசென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் நாளை வெளியாகவிருக்கும் துருவநட்சத்திரம் வெளியீட்டிற்கு தடைகோரியும் புகார் அளித்துள்ளார்.
ஆல் இன் பிக்சா்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 2.40 கோடியை நாளை 10.30 மணிக்குள் திருப்பி தரவேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அப்படி தரவில்லையென்றால் துருவ நட்சத்திரம் பட வெளியிட கூடாது எனநீதிபதி சரவணன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஒரு பட ரிலீசுக்கு இத்தனை தடங்களா என சமூகவலைதளங்களில் திரை ரசிகா்கள் பதிவிட்டு வருகின்றனா்.