லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. அதில் ஆபாச வார்த்தைகள் இருந்ததாக சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில் லியோ படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கி வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது உலகளவில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.