கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
வால்பாறை பகுதியில் நேற்று இரவு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது இதன் காரணமாக சோலையார் அணை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராஜேஸ்வரி, ஜனப்பிரியா உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் பொள்ளாச்சி பகுதியில் பெய்த மழையின் காரணமாக கோமங்கலம் பகுதியில் வீடு சுவர் இடிந்து விழுந்து ஹரிஹரசுதன் (20) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடலை கோமங்கலம் போலீசார் மீட்டு பிரேத பிரேதசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.