பெரம்பலூரில் களைகட்டிய கும்பாபிஷேக விழா….!!!

பெரம்பலூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தநாச்சியம்மன் உடனுறை பொன்னம்பல எமாபுரீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூரில் அபிராமபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தநாச்சியம்மன் உடனுறை ஸ்ரீ பொன்னம்பல எமாபுரீஸ்வரர் சுவாமி மற்றும் கல்லணையான் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் குடி வழிபாட்டு மக்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

இதற்காக நேற்று  விநாயகர் பூஜையுடன், வேள்வி யாகம் தொடங்கப்பட்டு, மூன்று கால பூஜையை  தொடர்ந்து இன்று காலை மகா பூர்ணஹீதி உள்ளிட்ட யாகம் நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து மங்கள வாத்திய இசைகள் முழங்க, கடங்கள் புறப்பட்டு, கோவில் கோபுரம் கொண்டு வரப்பட்டு, கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது .புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

தொடர்ந்து சுவாமி சிலைகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், குடி வழிபாட்டு மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

RELATED ARTICLES

Recent News