ஒரு ஆண்டில் பிரபல முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி அறிமுக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களும் வருவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் லெவன், குட் பேட் அக்லி, குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் பேமிலி, மாமன், மதகஜராஜா ஆகிய திரைப்படங்கள் மட்டுமே மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
அதே சமயம் விடாமுயற்சி., தக்லைப் போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தது. ஆனால் இதனிடையே ரீரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
ஒரு படம் நல்ல கதைகளைத்துடன் அமைந்திருந்தால் அவற்றின் வசூலை பற்றி கவலை படவேண்டிய அவசியம் இல்லை. அதுவே படத்தின் கதை சரியில்லை என்றால் தயாரிப்பாளர் தலையில் துண்டு விழுந்து விடும்..
அந்த வகையில் தான் குபேரா படமும்., சேகர் கம்முலா இயக்கத்தில்., ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆரம்ப கதைக்களம் மொக்கையாக இருந்தாலும் கடைசி 40 நிமிட கதையும்., தனுஷ், நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா நடிப்பு செம மாஸ் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இப்படம் முதல் நாளிலேயே தமிழகத்தில் 10 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.