துள்ளுவதோ இளமை படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானவர் தனுஷ். இந்த படத்திற்கு பிறகு, பல்வேறு போராட்டங்களை சந்தித்த அவர், தற்போது வெற்றிகரமான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும், நடித்து அசத்தியிருக்கிறார். இந்நிலையில், நடிகர் தனுஷ் சினிமாவில் நுழைந்து, 23 வருடங்களை கடந்திருக்கிறார்.
இதனை சிறப்பிக்கும் வகையில், அவர் நடித்து வரும் குபோரா படத்தின் படக்குழுவினர், புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளனர். அதன்படி, அந்த திரைப்படத்தில், இவர் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.