காஞ்சிபுரம் மாவட்டம் பஞ்சுபேட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவருடைய மகன் ஜெகன் என்பவர், தன்னுடைய நன்பர்கள் வைத்திருக்கும் KTM பைக் வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதனால், தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து, மகன் ஆசைப்பட்ட அந்த பைக்கையே வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஆனால் இரண்டே மாதத்தில், ஜாக்காப்சர் பழுதானதால் அதிர்ச்சியடைந்த ஜெகன், பைக் வாங்கிய ஷோரூமில் முறையிட்டுள்ளார். அங்கு, 8 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் சரி செய்ய முடியும் என்று ஷோ ரூமை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பைக் வாங்கி சில நாட்கள் தான் ஆவதால், நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் என்று ஷோ ரூம் உரிமையாளர்களிடம் ஜெகன் தரப்பு தெரிவித்துள்ளனர்.
பின்னர், ஷோ ரூம் உரிமையாளர்கள், அந்த பிரச்சனையை சரிசெய்து கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து, 5 மாதங்களுக்கு பிறகு, பைக்கில் சென்று கொண்டு இருந்தபோது, வழியிலேயே பைக்கின் இருவீல்களும் உடைந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி, ஷோரூம் மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால், நீங்கள் பயன்படுத்திய விதம் சரியில்லை. நீங்கள் இன்சூரன்ஸ் பெற்று சரி செய்து கொள்ள வேண்டும். எங்களுக்கும் அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பயனற்ற தகவலை அளித்துள்ளார். இதுதொடர்பாக, கண்ணீருடன் அந்த பெண் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.