90-ஸ் கிட்ஸின் பேவரைட்டாக பல்வேறு திரைப்படங்கள் உள்ளன. அந்த லிஸ்டில், முக்கிய இடம் பிடித்திருப்பது, கிங்-காங் திரைப்படம்.
இதேபோல், காட்ஸில்லா திரைப்படமும், பெரும்பாலான 90-ஸ் கிட்ஸை கவர்ந்துள்ளன.
இவ்வாறு இருக்க, இந்த இரண்டு விலங்கினங்களையும் ஒன்றாக இணைக்கும் புதிய முயற்சியாக, கிங்-காங் அன்ட் காட்ஷில்லா என்ற திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது.
பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
கிங்-காங் அன்ட் காட்ஷில்லா தி நியூ எம்பயர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நலையில், இப்படத்தின் தமிழ் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், பிரம்மாண்ட காட்சிகளை பார்த்து, அசந்து போயுள்ளனர்.