இந்தியில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்தப்படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்ய அங்குள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம், கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : “நான் இன்னும் தி கேரளா ஸ்டோரி படத்தை பார்க்கவில்லை. ஆனால், அப்படத்தை தடை செய்வதற்கு பலரும் போராடினர் என்பது எனக்கு தெரியும்” நீதிமன்றம் கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய முடியாது என கூறிவிட்டது. “இந்த படம், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரை தவிர வேறு யாரையும் தவறாக சித்தரிக்கவிலை. கேரளா ஸ்டோரி படம் உங்களை குறிவைத்து தாக்குவது போல நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒரு தீவிரவாதி” என்று கூறினார்.