முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். இப்படம் கடந்த 2ம் தேதி வெளியானது. படம் வெளியானது முதல் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தது.
படம் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில் தற்போது வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது வரை 7.80 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படமும் தோல்வியில் முடிந்துள்ளது.