அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் கடந்த 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான முதல் 4 நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.
தினம்தோறும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வந்த நிலையில், திங்கட்கிழமையான நேற்று 50 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
5 நாட்களில் ஜவான் திரைப்படம் உலகளவில் ரூ.600 கோடியை தாண்டியிருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்றே ஷாக் கொடுக்கும் விதமாக ரூ.574.89 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
அக்டோபர் 5ம் தேதி ஓடிடியில் ஷாருக்கான் படம் வெளியாக போவதாக தகவல்கள் தீயாய் பரவி வருவதும் படத்தின் வசூல் வேட்டைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதுகின்றனர்.