தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பா.ரஞ்சித். இவர், நீலம் புரெடாக்ஷன் நிறுவனத்தின் மூலம் பல்வேறு தரமான திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் தயாரித்து வரும் ஜே.பேபி திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதாவது, இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை கூட சென்சார் அதிகாரிகள் நீக்கவில்லை என்றும், ஒரு வசனத்தை கூட Mute செய்யவில்லை என்றும், இது சுத்தமான U சான்றிதழ் திரைப்படம் என்றும் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
நீலம் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு, இவ்வாறு காட்சிகள் நீக்கப்படாமல் இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.