கனமழை தெரியும்…புழுமழை தெரியுமா?? இதோ பாருங்க : வைரல் வீடியோ

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்த காட்சிகள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன.

இந்த வீடியோ இணயத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பழுப்பு நிறத்தில் தடிமனான அளவுள்ள புழுக்கள் வரிசையாக நிற்கும் கார்களின் மீது படர்ந்து காணப்படுகிறது.

இந்த புழுக்கள் நம் மீது விழுந்து விட கூடாது என்பதற்காக சிலர் குடை பிடித்தபடியே பாதுகாப்பாக செல்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

RELATED ARTICLES

Recent News