தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று நாகை மாவட்டத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மதவேறுபாடு இல்லாத சமூக சமத்துவத்துவத்துக்கும் பெயர் போன மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழும் மக்கள் நாகை மக்கள் என்றும் பெருமிதம் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று நாகை மாவட்டத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மதவேறுபாடு இல்லாத சமூக சமத்துவத்துவத்துக்கும் பெயர் போன மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழும் மக்கள் நாகை மக்கள் என்றும் பெருமிதம் பேசினார்.
கப்பலில் இருந்து வந்து இறங்கும் பொருட்களை அப்போதெல்லாம் அந்திக்கடை என்ற இடத்தில் விற்பனை செய்வார்கள். ஆனால் இப்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் பகுதியாக நாகப்பட்டினம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம்; ஆனால் நவீன வசதியுடன் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை..? அடிப்படை வசதிகள் இல்லாத வீடுகள், குறிப்பாக அதிக குடிசைகள் கொண்ட மாவட்டமாகவும் நாகப்பட்டினம் தான் உள்ளது.
தமிழக முன்னேற்றத்திற்கு எங்களது ஆட்சி தான் சாட்சி என தமிழக அரசு பேசியதை சுட்டிக்காட்டி அடுக்கு முறையில் பேசியதை கேட்டு காதில் இருந்த ரத்தம் வந்துவிட்டதாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணத்தைப் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் மதுரை மாநாட்டில் நான் பேசியது அவ்வளவு பெரிய குற்றமா..? என்று கேள்வி எழுப்பினார்.
மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நம்முடைய கடமை. நம்முடைய உரிமை. நான் என்ன இன்று நேற்றா அவர்களுக்காக குரல் கொடுக்கிறேன், இதே நாகப்பட்டினத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு மீனவர்கள் தாக்கப்பட்டதற்காக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நான் வந்து கலந்து கொண்டேன். இப்போது நான் நாகப்பட்டினத்திற்கு வருவது புதிதல்ல…
விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து இன்று நிற்கிறேன். இன்றும் அன்றும் என்றும் மக்களுக்காக நிற்பது தான் என் கடமை. மீனவர்களின் உயிர் எந்த அளவு முக்கியமோ அந்த அளவுக்கு இலங்கை தமிழர்களுடைய உயிரும் வாழ்வும் நமக்கு மிக முக்கியம்.