தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானின் செயல் குறித்து, இணக்கமாக உள்ள நாடுகளிடம் எடுத்துரைப்பதற்கு, மத்திய அரசு சார்பில், தூதுக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குழுவில், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 7 பேர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசு தன்னை இந்த தூதுக்குழுவில் நியமித்தது குறித்து, சசி தரூர் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதில், “அரசின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதில், எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை” என்றும், “நாட்டின் நலனைக் காட்டிலும், அரசியல் முக்கியம் இல்லை” என்றும், அவர் கூறியுள்ளார்.
மேலும், நாட்டிற்காக எனது சேவை தேவைப்படும் நேரத்தில், அதற்காக தேடப்படும் நபராக இருக்க மாட்டேன். நானே உடனே முன்வருவேன் என்றும், அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக, காங்கிரஸ் கட்சியின் எம்.பியான சசி தரூர், பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும், புகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.