தோல்வி அடைந்த பி.எஸ்.எல்.வி- சி61 மிஷன்!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி. சி 61 என்ற மிஷனை துவங்கியிருந்தது. இந்த மிஷனையொட்டி, விண்வெளியில் இன்று ஏவுகனை ஒன்று செலுத்தப்பட இருந்தது.

ஆனால், ஏவுகனை செலுத்தப்பட்ட 8 நிமிடங்களுக்கு பிறகு, இதுதொடர்பான நேரடி ஒளிபரப்பை, இஸ்ரோ நிறுவனம் திடீரென நிறுத்தியது. இதுதொடர்பான ஆரம்பகட்ட தகவலின்படி, விண்கலம் 4-வது கட்டத்தை எட்டியபோது, திடிரென பிரச்சனையை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள இஸ்ரோவின் தலைவர் வி.நாராயணன், 2-வது கட்டத்தில் விண்கலம் சரியாகவே செயல்பட்டது. 3-வது கட்டத்தின்போது சில பழுது ஏற்பட்டது. ஆனால், அது செயல்படுவதாகவே நாங்கள் கருதினோம். இறுதியில், இந்த மிஷன் முடியவில்லை என்று தெரியவந்தது. எனவே, எதனால் பிரச்சனை ஏற்பட்டது என்று, நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News