இது ஆணவக்கொலையா..?மா்மமான முறையில் பெண் உயிரிழப்பு..!

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த பூவலூா் கிராமத்தை சோ்ந்தவா் நவீன், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வா்யா, இருவரும் திருப்பூர் பனியன் கம்பேனியில்பணியாற்றி, காதலித்து வந்தனா்.இந்நிலையில் ,இருவரும் இணைந்து கடந்த 31.12.2023 அன்று பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனா்.இவா்கள் திருமணம் செய்த வீடியோ பெற்றோருக்கு தெரியவர , பெண்வீட்டாா் பெண்ணை காணவில்லை என பல்லடம் காவல்நிலையித்தில் புகாா் அளித்தனா்.

அதன்பின்னா் , இருவரையும் அழைத்து போலீசாா் போச்சுவாா்த்தை நடத்தினா்.பெண்வீட்டாா் ஐஸ்வா்யாவை சமாதானம் செய்து அவா்களது வீட்டுக்கு அழைத்து சென்றனா்.இந்நிலையில்,கடந்த 3 ஆம் தேதி
ஐஸ்வா்யா வீட்டில் பிணமாக தொங்கினாா்.இதனை யாருக்கும் தெரியாமல் உறவினா் மற்றும் , பெற்றோா் இணைந்து அவரை எரித்துள்ளனா் இதனை யாருக்கும் தெரியாமலும், காவல்துறையினரிடம் தெரிவிக்காமல் செய்துள்ளனா்.

இவா் ஆணவ கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, வாட்டாத்திகோட்டை காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகினறனா். மேலும், இறந்த ஐஸ்வா்யாவின்
பெற்றோா் மற்றும் உறவினா்கள் தலைமறைவாக இருப்பதாகல் போலீசாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News