SHOOTING இடைவெளியிலா ? போட்டோகிராபியை தொடா்ந்து … CHEF ஆக மாறிய அஜித் ..அடுத்தது என்ன ?

துணிவு படத்திற்கு பிறகு அடுத்ததாக நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அர்ஜூன், திரிஷா, ஆரவ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இதன் இடைவெளியில் அஜித் தனது ஃபேவுரட் ஹாபியான போட்டாகிராபிராக மாறி அனைவரையும் படம்பிடித்து மகிழ்ச்சியடைய செய்தாா்.இதனைத்தொடா்ந்து சென்னை திரும்பிய படக்குழுவினா் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடா்ந்துள்ளனா்.இந்த இடைவெளியில்
அஜித் பிரியாணி சமைத்து தனது படக்குழுவினருக்குஅளித்துள்ளாா்.இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதற்கு அஜித் ரசிகா்கள்
பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News