தொடங்குகிறதா பஞ்சதந்திம்-2 ம் பாகம்..?

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களுள் ஒன்று பஞ்சதந்திரம். 2002-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகவேண்டும் என்று நெடுநாட்களாக மக்கள் விருப்பம் தெரிவித்துவந்த நிலையில், அதில் நடித்த நடிகர் நடிகையர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். முன்னதாகவே நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பதிவில் தன்னிடம் நிறைய பேர் பஞ்சதந்திரம் 2-ம் பாகம் வருமா என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள். கமல்ஹாசன் நினைத்தால் அது நடக்கும் என்று கூறியுள்ளார். தற்போது நடிகை ரம்யாகிருஷ்ணனும் பஞ்சதந்திரம் 2ம் பாகம் எடுப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,” கமல்ஹாசனுடன் எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பஞ்சதந்திரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்தப்படத்தில் எனது கதாபாத்திரம் முடிவடையவில்லை. எனவே பஞ்சதந்திரம் 2-ம் பாகம் எடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன்” என்ற அவர் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் 2-ம் பாகம் உருவாகுமா என்று மிகுந்த ஆவலோடு எதிர்பாக்கின்றனர்.

RELATED ARTICLES

Recent News