இஸ்ரேல் ஈரான் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இந்நிலையில் ஈரான் அதிபர் மதகுரு அயத்துல்லா கமேனி தஞ்சம் அடைந்துள்ள இடம் தனக்கு தெரியும் என்றும்., நிபந்தனையின்றி உடனடியாக சரணடைய வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அலி கமேனி போர் தொடங்கிவிட்டது என பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ஈரானின் உச்ச தலைவரை கொல்லும் திட்டம் தற்போது இல்லை என்றும்., தஞ்சம் அடைந்துள்ள அவர் எவ்வித நிபந்தனை அளிக்காமல் உடனடியாக சரணடையுமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கமேனி தஞ்சம் அடைந்துள்ள இடம் தங்களுக்கு தெரியும் என்பதால்., மறுப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் எதற்கும் ஓர் எல்லையுண்டு என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரம்பின் இந்த பதிவிற்கு., அலி கமேனி எக்ஸ் வலைதளப் பக்கத்திலேயே பதில் அளித்துள்ளார். அதில், சியோனிஸ்ட்டின் பயங்கரவாத ஆட்சிக்கு ஈரான் கருணையின்றி தக்க பதிலடி கொடுக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஈரான் இடையே நடக்கும் இந்த தாக்குதல்களானது கருத்தியலுக்கான போராட்டம் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை மீது “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் ஈரான் தாக்குதல் நடத்தியது. அதில், 224 பேர் உயிரிழந்த நிலையில் 1800 பேர் படுகாயம் அடைந்தனர். இதுவே தற்போதைய தாக்குதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது..