அமெரிக்காவின் புதிய அதிபராக, குடியரசு கட்சியை சேர்ந்த டெனால்ட் டிரம்ப் சமீபத்தில் பதவி ஏற்றார். இவர், பதவியேற்ற நாளில் இருந்து, பல்வேறு அதிரடியான மாற்றங்களை அந்நாட்டில் நிகழ்த்தி வருகிறார். குறிப்பாக, அமெரிக்க குடியுரிமை சம்பந்தமான விஷயங்களிலும், விசா சம்பந்தமான விஷயங்களிலும், சட்டங்களை மிகவும் கடுமையாக மாற்றியுள்ளார்.
இதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும், அதிகப்படியாக உயர்த்தியுள்ளார். அதன்படி, கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கான இறக்குமதி வரியை, முறையே 25 சதவீதம், 25 சதவீதம், 10 சதவீதம் என்று உயர்த்தியுள்ளார்.
டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 87.29 மாறியுள்ளது. வரலாறு காணாத வகையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.