ஒரு கால கட்டத்தில், தமிழ் சினிமா அனைத்து தென்னிந்திய மொழி படங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தது. தமிழ் மொழியில் உள்ள கலைஞர்களுக்கு, மற்ற மொழிகளில் பணியாற்றும்போது, நல்ல மரியாதை கிடைத்தது. ஆனால், சமீபகாலங்களாக, தமிழ் திரைப்படங்களின் ஆதிக்கம் குறைந்துக் கொண்டே செல்கிறது.
மேலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்கள் பல, ஒட்டுமொத்த இந்தியாவிலும், வரவேற்பை பெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி, பேன் இந்தியா படங்கள் என்ற பிராண்டையும் பெற்றுவிட்டன. ஆனால், சொல்லிக் கொள்ளும் அளவிற்கு, ஒரு பேன் இந்தியா படமும், இன்னும் தமிழில் வெளியாகவில்லை.
இதனை உடைத்தெறியும் வகையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குநர் ஷங்கர் தனது கனவு புரொஜக்டனா இந்தியன் 2-ஐ, கமலை வைத்து, பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய சில காட்சிகளை, கமல் ஹாசனுக்கு, ஷங்கர் போட்டுக் காட்டியுள்ளாராம்.
அதனை பார்த்து பிரம்மிப்பு அடைந்த கமல், இந்த திரைப்படம் இந்திய அளவில் பிரம்மாண்ட வெற்றியை பெறும் என்று கூறியுள்ளாராம்.
பல்வேறு தொடர் தோல்வி படங்களை கொடுத்த தமிழ் சினிமா, விக்ரம் என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்துவிட்டு தான் தலை நிமிர்ந்தது. தற்போது, மீண்டும் கமல் ஹாசன் படத்தால் தான் தலைநிமிரும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை என்று ரசிகர்களும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.