தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு….அச்சத்தில் மக்கள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள உத்தரவில்,”திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர்,திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. ஆகவே டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை உடனே அணுக வேண்டும். காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News