சென்னையில் 25 இடங்களில் வருமானவரி துறை சோதனை..!

சென்னையில் தொழிலதிபர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வடபழனியில் காவல் நிலையம் எதிரே உள்ள அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பு, ஆழ்வார்பேட்டையில் மெரிடியன் பில்டர்ஸ் குடியிருப்பு, மற்றும் MRC நகரில் உள்ள TVH பெலிசியா டவர்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வடபழனி, நங்கநல்லூர், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே ஆர்சியான் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து சென்னை தியாகராய மேற்கு க்ரசெண்ட் சாலையில் உள்ள அலுவலகம், அசோக் நகர் உமாபதி சாலையில் உள்ள வீடு, வடபழனி அப்பாசாமி டவரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

சென்னையில் ஒரே நாளில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தொழிலதிபர்கள் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News