நாள்தோறும், மிக அதிக அளவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. அதே நேரம் இதன் மூலம் அதிக அளவிலான மோசடிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஆன்லைன் பணிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை முழுமையாக தடுக்கும் விதமாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 5000 ரூபாய்க்கு அதிகமான தொகையை தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அனுப்பும்போது குறிப்பிட்ட அந்த எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது அழைப்பின் மூலமாகவோ ஒரு அலெர்ட் தகவல் வழங்கப்படும். அந்த அறிவிப்பை ஏற்று அவர்கள் அங்கீகரித்தால் மட்டுமே அந்த பேமென்ட் இனி செல்லுபடியாகும் என்ற நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாக யுபிஐயில் இணையும் நபர் ரூ.2000க்கும் மேல் அதிகமான தொகையை முதல்முறையாக, பெறவோ, அனுப்பவோ முடியாது என்ற விதிமுறையையும் விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.