சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிகார் மக்கள் தூங்கும்போது வாக்கு திருட்டு நடந்துள்ளது. தற்பொழுது மக்கள் விழித்துக் கொண்டார்கள். திருடர்கள் அவர்களாகவே திருந்தி கொள்வார்கள் அல்லது திருத்தப்படுவார்கள் என்றார். மேலும் பீகார் மற்றும் பிற மாநிலங்கள் நடந்தது போல தமிழகத்தில் நடக்காது என்றார்.
எடப்பாடி தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்று சொன்னது குறித்த கேள்விக்கு அவருக்கு பாதுகாப்பு இல்லாமல் எங்கே இருக்கிறது? அவருக்கு ஆம்புலன்ஸ் ஒன்று தான் பாதுகாப்பு இல்லை, ஆம்புலன்ஸ் – ஐ கண்டாலே அலர்ஜியாக கூடிய ஒரே நபர் எடப்பாடி என்றார் .
விஜய்க்கு தமிழக அரசு நெருக்கடி கொடுப்பதாக பிரேமலதா விஜயகாந்தின் குற்றச்சாட்டிற்கு, ஒன்றிய அரசுதான் தமிழக அரசிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஒன்றிய அரசை எதிர்த்தும், அவர்களுக்கு துணையாக வருபவர்களை எதிர்ப்பது தான் எங்களின் நோக்கம். நாங்கள் யாருக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை என்றார்.
கடந்த அதிமுகவின் 10 ஆண்டுகால (2011 – 21) ஆட்சியில் விவசாய பயிர்கடன் சராசரியாக ரூ 6000 கோடி தான் வழங்கியுள்ளார்கள். ஆனால் நமது முதல்வர் முதல் ஆண்டிலே 10000 கோடி, அடுத்து 14 ஆயிரம் கோடி, இந்த ஆண்டு 16 ஆயிரம் கோடி பயிர் கடனுக்கே இலக்கு நிர்ணயித்து உள்ளார்கள் என்று கூறினர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஹிந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, அதனை பல இடங்களில் அழித்து வருகின்றனர், தமிழக மக்களை ஒன்றிய அரசு சீண்டும் முயற்சியினை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் கூட்டணி மாடலை கொண்டு வந்ததே திமுக தான். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணிகள் அமைவது சகஜம் தான். ஆனால் வரும் தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.
வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று விஜய் கூறியது குறித்த கேள்விக்கு அவர் சராசரியாக இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினர் .
அண்ணாமலை முறைகேடாக சொத்து சேர்த்திருந்தால் அது முறையற்றது, கண்டிக்கத்தக்கது என அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.